'ராஜபக்சர்கள் மீண்டெழுவார்கள்'

Admin
Aug 13,2022

தீர்மானமிக்க காலப்பகுதி ஒன்று இல்லாவிட்டாலும் ராஜபக்சர்களுடன் மீண்டெழுந்து வருவோம் என களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியில் இருந்து விலகினார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய நாட்டை விட்டு வெளியேறினார். எனக்கு பக்கத்து ஆசனத்தில் இருந்த நாமல், அமைச்சர் பதவியை விட்டு விலகினார். ஆனால் இன்னும் சிலர் ராஜபக்சர்களை கண்டு மிகவும் பயப்படுகிறார்கள். நள்ளிரவில் கூட கண்விழித்து ராஜபக்ஷ ராஜபக்ஷ என்று கனவில் கூட கூச்சலிடுகின்றார்கள். ஆனால், ஊஞ்சல் முன் பக்கம் சென்றால் பின்பக்கமும் வரும். நாம் அன்றும் இன்றும் நாளையும் நாங்கள் ராஜபக்ஷர்களுடன் இருக்கிறோம். திகதியும் இல்லை, நேரமும் இல்லை, மீண்டும் எழுவோம் என்று மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.