பசுமை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

Admin
Feb 08,2023

இலங்கையின் காலநிலை மாற்றம் தொடர்பான செயற்பாடுகளின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பசுமை வளர்ச்சி அபிவிருத்தியை வலுவூட்டுதல் ஆகிய செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக, உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.

இந்த ஒப்பந்தமானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகமும் பொதுச்சபையின் தலைவரும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனச் சபையின் தலைவருமான பான் கி மூன் ஆகியோர் முன்னிலையில் நேற்று  (07) பிற்பகல் கைச்சாத்திடப்பட்டது.

அரசாங்கமும் உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனமும் பசுமை வளர்ச்சி தொடர்பான முயற்சிகள் குறித்த திட்டங்களை திறம்பட வடிவமைப்பதற்கு ஏதுவாக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.