துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Admin
Feb 06,2023

துருக்கியின் நர்டஹி நகரில் இருந்து 23 கிலோமீற்றர் கிழக்கே இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி அதிகாலை 3.20 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி - சிரியா எல்லை அருகே அமைந்துள்ளது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின, இந்த பயங்கர நிலநடுக்கத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதா என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

அதேவேளை துருக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட அண்மித்த நாடுகளில் உணரப்பட்டுள்ளது.