பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு - தொடரும் பதற்றம்

Admin
Feb 06,2023

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(05) பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் காவல்துறை தலைமையகம் அருகே இடம்பெற்றுள்ளது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்புக்கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

காவல்துறை குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் குறித்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.