கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு- புதிதாக 48 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை

Admin
Jan 30,2023

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக 48 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு நேற்று ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த சம்பவம் நடைபெற்றபோது பணியில் இருந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக சி.பி.சி.ஐ.டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அடுத்தகட்ட விசாரணை குறித்தும் அடுத்து யாருக்கு சம்மன் வழங்குவது குறித்தும்
தமிழகம் அரச விருந்தினர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.