சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
பயண ஆலோசனையை நீக்குமாறு ஐக்கிய இராச்சியத்திடம் இலங்கை வேண்டுகோள்
Admin
Aug 11,2022
இலங்கைக்கான பயண ஆலோசனையை நீக்குமாறு ஐக்கிய இராச்சியத்திடம் இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை நேற்று சந்தித்த போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல், இலங்கைக்கான பிரித்தானிய பயணிகளுக்கான பயண ஆலோசனையை நீக்குதல், சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களை கலந்துரையாடுவதற்காக, பிரித்தானிய உயர்ஸ்தானிகருடனான இந்த சந்திப்பை மேற்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.