வடக்கு ரயில் சேவைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

Admin
Jan 05,2023

வடக்கு ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் 8 ஆம் திகதி வரை வடக்கு ரயில் பாதையில் ரயில் சேவைகள் வழக்கம்போல் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முன்னதாக அனுராதபுரத்திலிருந்து வவுனியா வரையான ரயில் பாதை இன்று முதல் (05) 5 மாதங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடக்குப் பாதையில் சேவையில் ஈடுபடும் ரயில் கொழும்பு கோட்டையிலிருந்து அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது.

மேலும் இந்திய கடன் உதவித் திட்டங்களின் கீழ் வடக்கு ரயில் பாதையைப் பழுதுபார்ப்பதற்காக 91 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.