ஜெனீவாவை கையாள அரசாங்கம் புதிய வியூகம்

Admin
Aug 11,2022

எதிர்வரும் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளை சமாளிக்கும் விதமாக மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பிலான உரிய நிறுவனங்களால் ஒன்றிணைந்த ஒரு பொதுவான பொறிமுறையை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அவ்வாறு தயாரிக்கப்படும் அறிக்கையே இம்முறை இலங்கை சார்பில் முன்வைக்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்தார். 

எதிர்வரும் செப்டெம்பரில் கூடவுள்ள ஐ.நா.  மனித உரிமைகள் பேரவை பேரவையின் கூட்டத்தொடரில் இலங்கை குறித்து கவனம் செலுத்தப்படவுள்ள நிலையில், அமர்வை எதிர்கொள்ள இலங்கையிலிருந்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.  

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கம் முன்நகர்வு  நடவடிக்கைகளில் அவற்றை தேசிய ரீதியில் முன்னெடுக்கும் நிறுவனங்களுடன் கலந்துரையாடியுள்ளோம். 

மனித உரிமைகளைப் பாதுகாத்தல், நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் அவற்றுக்கு பொறுப்பான அந்தந்த நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும்,  எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஒரு வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் விஜயதாஸ ராஜபக் தெரிவித்தார். 

அதேபோல் இம்முறை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை முன்வைக்கும் அறிக்கையானது, இந்த நிறுவனங்கள் சகலதும் ஒன்றிணைந்து தயாரிக்கும்  ஒரு பொறிமுறையை அடிப்படையாக கொண்ட அறிக்கையேயாகவும். இப்போதும் நீதி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்துள்ள நிலையில், அவற்றையும் உள்ளடக்கியதும் அடுத்து வரும் காலங்களில் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் தெளிவான அறிக்கை ஒன்றினை முன்வைப்போம். இது குறித்து வெளிவிவகாரத்துறை அமைச்சருடனும் கலந்துரையாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.