இந்த வருடம் கடன் கிடையாது; இலங்கைக்கு கைவிரித்தது IMF

Admin
Dec 14,2022

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் டொலர் நீடிக்கப்பட்ட கடன் வசதியைப் இவ்வருட இறுதிக்குள் வழங்குவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அனைத்துக் கட்சி முடிவெடுக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்திலேயே அது இடம்பெற்றுள்ளது.