இன நல்லிணக்கம் தொடர்பில் ரணில்-சுமந்திரன் பேச்சு

Admin
Dec 11,2022

இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கட்சி பேச்சுவார்த்தைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் தீவிர கவனம் செலுத்தியுள்ளார்.

குறிப்பாக கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது பேச்சுவார்த்தைகளிற்கான பரந்த வரையறைகள் குறித்து ஆராயப்பட்டது.

ஜனாதிபதியுடன் பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

இதன்போது மாகாணசபை தேர்தல் மற்றும் மாதங்களுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களையும் நடைமுறைப்படுத்த சுமந்திரன் வேண்டுகோள்விடுத்தார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்த தீர்வுத் திட்டத்திலிருந்தும் பல யோசனைகளை சுமந்திரன் முன்வைத்திருந்தார்.

இருப்பினும் மாகாணசபை தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது குறித்து வேறு காரணங்களிற்காக ஜனாதிபதி முன்னர் தயக்கம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.