'அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும்'

Admin
Aug 09,2022

தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் புனர்வாழ்வு அல்லது சமூகமயப்படுத்தும் நடவடிக்கைகளின் பின்னர் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி பரிந்துரைத்துள்ளது.

 

இதில் 43 பரிந்துரைகள் உள்ளடங்குகின்றதோடு அவற்றில் தற்போது அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை குறித்தும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் அரசியல் கைதிகள் மீது நீதிமன்றில் பாரிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அதனை கருத்திற் கொள்ளாது அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேநேரம், நாட்டின் நடைமுறையில் உள்ள கண்டி சட்டம், தேசவழமை சட்டம் மற்றும் முஸ்லீம் சட்டம் என்பன அனைத்து மக்களுக்கும் பொதுவான சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்பதோடு சட்டங்களை சீர்திருத்துவது ஆகிய நடவடிக்கைகளுக்கான சரத்துக்களையும் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.