சஜித்,ரணிலை பின்னுக்கு தள்ளிய அனுரகுமார; வெளியான கருத்து கணிப்பு

Admin
Aug 09,2022

நாடு எதிர்நோக்கும் தற்போதைய நெருக்கடிக்கு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவால் தீர்வு காண முடியும் என அதிகளவிலான மக்கள் நம்புகின்றனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

தற்போதைய நெருக்கடிக்கு அனுரவினால் தீர்வு காண முடியும் என கணக்கெடுப்பில் கலந்து கொண்டவர்களில் 48.5 விகிதமானோர் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது 36.6 விகிதமானோர் நம்பிக்கை கொண்டுள்ள அதேவேளை 29.1% பேர் சஜித் பிரேமதாச மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.

23.7% டலஸ் அழகப்பெருமவால் நெருக்கடியை தீர்க்க முடியும் என்றும் மேலும் 18.3% பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் முடியும் என்றும் வாக்களித்துள்ளனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடியும் என 11.9% நம்புகின்றமையும் குறிப்பிடத்தக்கது.