பரபரப்படையும் கொழும்பு; இராணுவ தலைமையகத்துக்கு ஜனாதிபதி விஜயம்

Admin
Aug 09,2022

சமகால அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமையால் கொழும்பு நகரம் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில் அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்துள்ளார்.

ஜனாதிபதியாக பதவியேற்றதும் இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இன்றையதினம் அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.