சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும்; ஜனாதிபதியின் ஆசை

Admin
Nov 23,2022

நான் தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கு முயற்சிக்கின்றேன்.அவர்களுக்கான விடயங்களை செய்வதற்கு நான் நடவடிக்கை எடுத்து வருகிறேன்.சுதந்திர தினத்துக்கு முன்னர் எதையாவது செய்ய வேண்டும் என்று நான் நினைக்கின்றேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்:

சிங்கள மக்களிடமும் நான் பேச வேண்டும்.என்னை கிற்லர் போல நினைக்கிறார்கள்.கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற போராட்டம் வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர்.வீடுகள் உடைமைகள் அழிக்கப்பட்டன.அதற்கு பின்னர் மனைவி,பிள்ளைகள் அரசியலுக்கு செல்ல வேண்டாம் என நினைக்கிறார்கள்.இப்படியொரு நிலைக்கு மத்தியில் தான் நாம் சேவை செய்கின்றோம்.இந்த நிலையில் எமக்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இனி ஒரு போராட்டத்துக்கு இடமளிக்க மாட்டேன்.பாராளுமன்றத்தை கலைக்க மாட்டேன்.நாட்டை ஒரு பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.சிலர் நினைக்கிறார்கள் மக்கள் தங்கள் பக்கம் நிற்கிறார்கள் என்று.எதிர்க்கட்சி வாருங்கள்.எல்லோரும் சேர்ந்து செயற்படுவோம்.சுமந்திரன் வாருங்கள் இந்த இனப்பிரச்சினையை தீர்ப்போம்.மனோ வாருங்கள். என்றார்.