ஜே.வி.பி. - ஜனாதிபதி இன்று முக்கிய சந்திப்பு

Admin
Aug 09,2022

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும்,  அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்க மாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.