இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இன்று இலங்கைக்கு விஜயம்

Admin
Nov 19,2022

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இதற்கமைய அவர் இன்றும் நாளையம் இலங்கையில் தங்கியிக்கும் அதேவேளை ஜனாதிபதி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த காலங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை

இவ்வாறான ஓர் பின்னணியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கை விஜயம் செய்கின்றமை குறிப்பிடத்தக்கது