தடைகளையும் மீறி மாவீரர் துயிலும் இல்ல துப்பரவுப் பணி

Admin
Nov 18,2022

அம்பாறையில் காவல்துறையின் தடைகளையும் மீறி மாவீரர் துயிலும் இல்ல துப்பரவுப் பணி இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை கஞ்சிக்குடியாறு துயிலுமில்லத்தில் இன்றைய தினம் காலை இந்த துப்பரவுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது அந்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தடை ஏற்படுத்த முயன்ற போதும் அது தொடர்பான விளக்கமளிக்கப்பட்ட பின்னர் திரும்பிச் சென்றனர்.

அதேவேளை கஞ்சிக்குடியாறில் கட்சி பேதங்களின்றி முன்னாள் போராளிகளின் தலைமையிலேயே மாவீரர் நினைவேந்தல் இடம்பெறும் என முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இத்துப்பரவுப் பணியின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி. ஜெயசிறில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், முன்னாள் போராளிகள், பொது மக்கள் எனப் பெருந்தொகையானோர் பங்கு கொண்டனர்.