"கார்திகைப்பூவை தமிழர் தேசத்தில் பயிரிட வேண்டும்"

Admin
Nov 18,2022

கார்திகைப்பூவை  தமிழர் தேசத்தில் பயிரிட வேண்டும் என தமிழ்த்தேசிய  பசுமை இயக்கத்தின் தலைவரும்,முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்கா வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

கார்த்திகை விதைகள் இந்தியாவில் பெரும் அந்நிய செலாவணியை ஈட்டித தருகின்ற அளவிற்கு,பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் இற்றை வரைக்கும் பயிரடப்படுகின்றது.
 நாங்கள் இங்கு அதனை பயிரிட வேண்டும்.ஆனால் இந்த கார்த்திகை பூவினை நிராகரிப்பதற்காக கார்த்திகை பூவில் விஷம் இருப்பதாக கூறுகிறார்கள். எங்கள் நாவில் இருக்கிற விஷமா?அந்த கார்த்திகை பூவில் இருக்க போகிறது.

பால் புரைக்கேறி செத்தர்வர்களும் இருக்கிறார்கள்,பாம்பு கடித்து தப்பியவர்களும் இருக்கிறார்கள். ஆகவே இங்கு விஷம் என்பதற்கு எந்த பிரச்சனையும் இல்லை.ஏராளமான நோய்களுக்கான மருந்தினை இதிலிருந்து தயாரித்து இருக்கிறார்கள்.

வனஜீவராசி திணைக்களம் ,எங்களின் பறவைகள் எச்சம் போட்ட இடத்தினை கூட அபகரித்து தங்களுடைய இடமாக மாற்றி வருகிறது.தொல்லியல் திணைக்களம் தங்களுக்கு எங்கெங்கே வாய்ப்பான இடம் இருக்கிறதோ ,அல்லது கலை சிற்பங்களுடன் கூடிய அடையாள இடங்கள் எங்கு இருக்கிறதோ அவற்றினை பௌத்த சின்னங்களாக கருதி ஆக்கிரமித்து இருக்கிறார்கள்.

அவர்களுடைய நோக்கம், எங்களை நிலம் அற்றவர்களாக மாற்றுவது.எங்களை விரட்டி,எங்களின் வன நிலங்களை அபகரிப்பதே இவர்களின் நோக்கம்.

யுத்த காலங்களில் வன்னியில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து சென்றார்கள்.இலங்கை சுற்றுப்புறச் சூழலின் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்களுக்கான ஆட்சி உரிமையை அவர்கள் ஒப்படைக்க வேண்டும்.

எங்களுடைய பிரச்சனை தேசிய இனப்பிரச்சனை,வடக்குக்கான பிரச்சனை அல்ல.யுத்தம் நடந்து இவ்வளவு காலம் கடந்து விடட பின்னரும் கூட அரசியல் ரீதியாக நிர்க்கதியானவர்களாவே இருக்கின்றோம்.நாங்கள் ஆளுக்கொரு மரம் நடுவோம்.

மாவீரர்கள் நினைவாக மர நடுகை செய்வதன் மூலம் நிச்சயமாக இந்த மரம் காப்பாற்றப்படும்.பேசினால் நாங்கள் மயங்கி விழுந்து விடுவோம் என்று சொல்லக்கூடிய தலைவர்கள் தான் எம்மிடம் இருக்கிறர்கள். இந்த தலைவர்களை வைத்து எங்களுக்கான தீர்வை பெற முடியாது.

தேர்தலில் வாக்கு கேட்டு எங்கள் இளைய தலைமுறையினருக்கு பியர் டின்களை கொடுத்து வாக்கு வாங்குகின்ற அரசியல்வாதிகள் எங்கள் மத்தியில்உள்ளனர்.அவர்கள் போதையினை கட்டுப்படுத்துவோம் என்று சொல்லவதெல்லாம் வெறுமனே வாய்ப்பேச்சசிலே இருக்கும்.

 நீங்கள் அவர்களை நிராகரியுங்கள்.புதிய தலைமுறை இந்த மண்ணிற்கு வரட்டும்.அப்போது தான் இந்த மண் காப்பாற்றப்படும் என்றார்.