நாளை முதல் கடவுச்சீட்டு கட்டணம் அதிகரிப்பு; விபரங்கள் உள்ளே

Admin
Nov 16,2022

கடவுச்சீட்டு கட்டணத்தை நாளை (17) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும் சாதாரண சேவை கட்டணம் 3,500 ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.