பாதீட்டு உரை இன்று

Admin
Nov 14,2022

2023ஆம் ஆண்டுக்கான பாதீட்டு உரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று(14) நாடாளுமன்றில் நிகழ்த்தப்படவுள்ளது.

ஜனாதிபதியின் பாதீட்டு உரை மீதான விவாதம் நாளை (15) முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

பின்னர் குழுநிலை விவாதம் 23ஆம் திகதி முதல் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடத்தப்படும்.

இது தொடர்பான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 8ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இதேவேளை, பாதீட்டில் 2023ஆம் ஆண்டுக்காக 7,885 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு பாதீட்டு மதிப்பீடு 29.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

இன்றைய சூழ்நிலையில் இவ்வாறு அதிக தொகை மதிப்பிடப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.