நாடாளுமன்றுக்கு பலத்த பாதுகாப்பு!

Admin
Nov 13,2022

பிரதமர் ஆற்றவுள்ள 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி நாளை பிற்பகல் 1.30 மணிக்கு வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றவுள்ளார்.

இதனை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறைகள் உட்பட நாடாளுமன்ற கட்டட தொகுதி முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதேவேளை நாளையதினம் பார்வையாளர் கூடம் தூதரக அதிகாரிகள் மட்டுமே திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தினத்தில் அப்பகுதியில் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னைய வருடங்களைப் போன்றே இம்முறையும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.