கடல் பயணம் ஊடாக கனடா செல்ல ஒருவருக்கு 5000 அமெரிக்க டொலர்

Admin
Nov 11,2022

கடல் பயணம் ஊடாக கனடா செல்ல ஒருவருக்கு  5000 அமெரிக்க டொலர் அறவிடப்பட்டுள்ளது

சட்ட விரோதமாக கடல் பயணம் ஊடாக கனடா செல்வதற்கு ஒரு நபருக்கு 5000 அமெரிக்க டொலர் அறவிடப்பட்டுள்ளதாக  கப்பலில் பிடிபட்ட இலங்கையர் ஒருவர் தெரிவித்துள்ளார்

சட்டவிரோதமாக கனடாவை நோக்கி செல்ல முயற்சித்த 306 இலங்கை அகதிகள் நேற்றைய தினம் (9) சிங்கப்பூரின் கடற்படையின் உதவியுடன் ஜப்பான் கப்பலொன்றினால் மீட்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட அகதிகள் நேற்றிரவு வியட்நாம் துறைமுகத்தை நோக்கி அழைத்து செல்லப்பட்டதாகவும் அங்குள்ள முகாமொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கப்பலில் பயணித்த அகதி ஒருவரின் உறவினர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தார்

மேலும் இந்த கப்பலில் சென்றவர்கள் தமது பூர்வீக சொத்துக்கள் அனைத்தையும் விற்பனை செய்துஇ மீண்டும் இலங்கைக்கு வர விரும்பாத நிலையிலேயே கனடா நோக்கி செல்ல தயாராகியுள்ளனர்.

கனடா செல்லும் அகதி ஒருவரிடமிருந்து தலா 5000 அமெரிக்க டொலர் அறவிடப்பட்டதாக கப்பலில் பயணித்த  நபர் ஒருவர் தெரிவித்துள்ளார் இலங்கையர்கள் உரிய வகையில் விசாக்களை பெற்று விமானத்தின் மூலம் ஒன்றரை மாதத்திற்கு முன்பாக மியன்மார் நோக்கி பயணித்துள்ளனர்.

முகவரினால் பெற்றுக்கொள்ளப்பட்ட 5000 அமெரிக்க டொலரின் ஊடாக விமான பயணச் சீட்டுக்கள் விசா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்துக்கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் மியன்மார் நோக்கி சென்ற இலங்கையர்கள் அங்கிருந்து கடந்த மாதம் 10ம் திகதி கனடா நோக்கிய தமது பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 28 நாட்கள் கடல் சீற்றம் உள்ளிட்ட  பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பயணித்த குறித்த கப்பலில் அண்மையில் தூவாரமொன்று ஏற்பட்டு கப்பலுக்குள் நீர் பிரவேசித்துள்ள நிலையில்இ கப்பல் மூழ்கும் அபாயத்தை எதிர்நோக்கிய போதே குறித்த கப்பலில் இருந்தவர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்கள் இதை அடுத்தே குறித்த அகதிகள் சிங்கப்பூர் கடற்படை உதவியுடன் ஜப்பான் கப்பல் மூலம் காப்பாற்றப்பட்டார்கள்

இதேவேளை வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகளை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நாட்டிற்கு அனுப்பினால்இ நாங்கள் தற்கொலை செய்துக்கொள்வோம் என அங்குள்ள அகதிகள் தெரிவித்துள்ளார்கள்