303 இலங்கையர்கள் வியட்னாமில் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?- படங்கள் இணைப்பு

Admin
Nov 09,2022

சிங்கப்பூர்-வியட்நாம் கடற்பரப்பில்  மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட இலங்கையர்களிற்கு உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் எனவும் வியட்நாம் ஊடகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் பதற்றமற்றவர்களாக மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்.அவர்களிற்கான தங்குமிடம், உணவு போன்றவற்றை அரசாங்கம் மிகவும் கௌரவமான விதத்தில் ஏற்பாடு செய்துள்ளது என்றும் அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அதிகாலை சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் இலங்கையர்களை சென்று பார்த்ததுடன் அவர்களிற்கு உதவுவதற்கு வியட்நாம் அரசாங்கமும் அதிகாரிகளும் அனைத்தையும் செய்வார்கள் என உறுதியளித்தார்.