இலங்கை தொடர்பில் ஐ.நா.விடுத்திருக்கும் எச்சரிக்கை

Admin
Nov 09,2022

இலங்கையின் மோசமான உணவு நெருக்கடி குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. 

அவசர மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள 22 மில்லியன் சனத்தொகையில் 1.7 மில்லியன் மக்களுக்கு உதவி தேவைப்படுவதாக ஜூன் மாதம் ஐ.நா முகவரகங்கள் மதிப்பிட்டிருந்த போதும், தற்போது அந்த எண்ணிக்கை 3.4 மில்லியனாக அதிகரித்துள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா முகவரங்கள், இன்றைய தினம்  வெளியிட்ட கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க 79 மில்லியன் டொலர்களை திரட்டப்பட்டதாகவும், ஆனால் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவர்களுக்கு கூடுதலாக 70 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாகவும் அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.