கனடாவில் நடந்த ஜிம்னாஸ்டிக் போட்டியில் தென்மராட்சி மாணவி சாதனை

Admin
Nov 09,2022

கனடாவில் ஒன்ராறியோ மாகாணத்தில் நடத்தப்பட்ட 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் செல்வி அபிசா அகிலகுமாரன் தங்கப்பதக்கத்தைப் பெற்றுத் தனது பெற்றோருக்கும் தாய் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Tamil mirror Awards Gala Night இல் செல்வி அபிசா அகிலகுமாரன் கௌரவிக்கப்பட்டார்.

இன, மத, மொழி பேதங்கடந்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் கைதடி நுணாவில் சாவகச்சேரியை பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் மாணவி வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.