"வடக்கு கிழக்கில் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை"; சபையில் ஆத்திரமுற்ற சுமந்திரன்,மனோ

Admin
Nov 08,2022

"வடக்கு கிழக்கில் யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை" என்ற கருத்தை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் தவிசாளர் அண்மையில் தெரிவித்திருந்தார்.யாரும் காணாமல் ஆக்கப்படவில்லை என்றால் ஏன் ,அதற்கான அலுவலகத்தை நிறுவினீர்கள்.பைத்தியம் போல கதைக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன், மனோ கணேசன் ஆகியோர் சபையில் இன்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச:

இப்படி ஒரு தகவல் வெளியிடப்பட்டதாக நான் அறியவில்லை.இவ்வாறு பொருத்தமற்ற கருத்துக்கள் ஏதேனும் வெளியிடப்பட்டு இருந்தால் அதற்கான விடயங்களை ஆராய்ந்து,சட்ட நடவடிக்கை எடுப்பேன் என்றார்.