ஜனநாயகத்திற்கான தங்க விருது இரா.சம்பந்தனுக்கு...

Admin
Nov 08,2022

அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கையில் ஒரு முறை மாத்திரமே வழங்கப்படும் ஜனநாயகத்திற்கான தங்க விருது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அரசியல் கற்கை நிறுவனமான இன்ஸ்டிடியூட் ஒப் பொலிடிக்ஸ் நிறுவனம் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் நிகழ்வில் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கம் ஆகிய துறைகள் சம்பந்தமாக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றனர்.

வருடத்தின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான சட்டத்தரணி பிரேம்நாத் சீ தொலவத்த ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.