100 வது நாள் ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு, கிழக்கு மக்களுக்கு பகிரங்க அழைப்பு!

Admin
Nov 06,2022

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வை பெற்றுத்தருமாறு வழியுறுத்தி "100 நாட்கள் செயல்முனைவு" எனும் தொணிப் பொருளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தின் 100 வது நாள் போராட்டம் எதிர்வரும் (08) ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இப் போராட்டமானது காலை 10.30 மணிக்கு திருகோணமலை -முத்தவெளி வெளி அரங்கில் இடம்பெறவுள்ளதால் சகல தமிழ் பேசும் மக்களும் இதில் கலந்து கொள்ள வருகைதருமாறு  ஏற்பாடு செய்துள்ள வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய, இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வேண்டிய மக்கள் பிரகடம் செய்யப்படவுள்ளதாகவும் ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.