யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Admin
Nov 06,2022

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சி.சிறிசற்குணராஜா மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவரே இந்த முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரின் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும், அதுதொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.