யாழில் இருந்து கொழும்பு சென்ற இரு பஸ்கள் மோதுண்டு விபத்து; மூவர் பலி

Admin
Nov 05,2022

யாழில் இருந்து கொழும்பு சென்ற பேரூந்துகள் மோதியதில் மூவர் உயிரிழந்த சமயம் மேலும் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பலூன் ரக பேரூந்துகளே இன்று அதிகாலை ஒரு மணிளவில் ஏ9 வீதியில் நொச்சிமோட்டை அருகே விபத்திற்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்போது மூவர் பரிதாபகரமாக உயிரிழந்த அதே நேரம் பலர் படுகாமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்திற்கு உள்ளான பேரூந்து தலைகீழாக பிரண்டு சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தொடர்பில் ஓமந்தை பொலிஸார் மேறகொண்டு வருகின்றனர்.