"அரசியலமைப்பு வரைவு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை மௌனப்படுத்தும் முயற்சி"

Admin
Nov 04,2022

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு வரைவு அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை மௌனப்படுத்தும் முயற்சி என இலங்கையின் கர்தினால் மல்கம் ரஞ்சித் விமர்சித்துள்ளார்.

ராஜபக்ச நியமித்த நிபுணர்கள் குழு, பொதுமக்களைக் கலந்தாலோசிக்காமல் அரசியலமைப்பை உருவாக்கி, தற்போதைய ஜனாதிபதியிடம் ஒப்படைத்துள்ளதாக, நீர்கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின்போது கர்தினால் ரஞ்சித் கூறியுள்ளார்.

இந்த அரசியலமைப்பு வரைவு நகலை தாமும் பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர்இ அதன் படி அரசாங்கம் அல்லது அரசு நிறுவனத்திற்கு எதிராக யாரேனும் குறைகளை வெளிப்படுத்தினால் குறைந்தது 20 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று அவர் கர்தினால் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் குறைகளைத் தீர்ப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புக்களை அணுகுவதை புதிய அரசியலமைப்பு தடுப்பதாகவும்  அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.