புலிகள் எங்களிடம் சரணடையவில்லை; இராணுவம் மீண்டும் தெரிவிப்பு

Admin
Nov 03,2022

இறுதி யுத்த காலப் பகுதியில் இலங்கை இராணுவத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகள் எவரும் சரணடையவில்லை என இலங்கை இராணுவம் மீண்டும் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலறியும் ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்த மேன்முறையீடு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இலங்கை இராணுவம் இவ்வாறு சாட்சியம் வழங்கியுள்ளதாக தமிழ் ஊடகம் ஒன்று  தெரிவித்துள்ளது.