நாட்டை நாசமாக்கிய விஷமிகளை இனி மதிக்க வேண்டாம்; கொழும்பு பேராயர் தெரிவிப்பு

Admin
Nov 03,2022

உலக வாழ்விட தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் பேரணி மற்றும் கருத்தரங்கு நிகழ்வு ஒன்று இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

நீர்கொழும்பு ருக்மணி கேட்போர் கூடத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது.இன்று உணவுக்காக எங்கே ஒதுங்கப்போகின்றோம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில்,முதன்மை விருந்தினராக கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கலந்துகொண்டார்.

நீர்கொழும்பு ஐக்கிய மக்கள் அமைப்பு ஜெனோபதி கேந்திர நிலையத்துடன் இணைந்து நிகழ்வுகளை ஒழுங்கு செய்திருந்தனர்.வீடுகள் இல்லாமல் அல்லல் படும் மக்களின் வாழ்க்கையை அரசு உள்ளிட்ட முக்கிய தரப்புகள் அக்கறையுடன் கவனித்து செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் மக்கள் வருகை தந்து கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய கொழும்பு பேராயர் தெரிவிக்கையில்:

நாட்டை கீழ் நிலைக்கு இட்டுச் சென்ற அரசியல்வாதிகளை மக்கள் இனி ஏற்றுக்கொள்ளக்கூடாது.அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவால் உருவாக்கப்பட்ட கொள்கைகள் இந்த நாட்டை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் என்றார்.