வடக்கில் 16 படையினர் உயிரிழப்பு - தொடரும் மர்மங்கள்

Admin
Nov 03,2022

வடக்கு மாகாணத்தில் படையினரின் மர்ம மரணங்கள் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கில் இவ்வருடம் இதுவரை 16 படையினரின் (இராணுவம், கடற்படை, விமானப்படை) சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 

இதில் 13 சடலங்கள் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளன.

16 சடலங்களில் 11 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்றும், 2 பேர் சக சிப்பாய்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 3 பேர் திடீர் சுகயீனம் காரணமாக இறந்துள்ளனர் என்றும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.