உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

Admin
Nov 02,2022

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்றைய தினம் காலை உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன்,சிரமதான பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணி பொறுப்பாளர் திருமதி சற்குணேஸ்வரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி அமைப்பாளர் இரத்தினசிங்கம். முரளீதரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி செயலாளர் திருமதி கிருபா கிரிதரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.