கொழும்பு துறைமுக நகரத்தில் திறக்கப்படவுள்ள தீர்வையில்லா வணிக வளாகம்

Admin
Nov 02,2022

கொழும்பு துறைமுக நகரத்தில் தீர்வையில்லா வணிக வளாகம் (duty free mall) அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் திறக்கப்படவுள்ளது.

இதில் உலகின் மூன்று முன்னணி நிறுவனங்கள் உள்ளடங்குவதுடன், இது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய தீர்வையில்லா வணிக வளாகமாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

இலங்கைக்கு பொருட்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் குறித்த வணிக வளாகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்வையற்ற வணிய வளாகத்தின் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் ஈர்க்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.