சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
அரச அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்; கொழும்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரம்
Admin
Nov 02,2022
அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் தீவிர பங்கேற்புடன் இன்று (02) மாலை 3 மணிக்கு கொழும்பு எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் மாபெரும் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
மருதானையில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வரை பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
இந்த போராட்டத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட 15 இற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் 150 இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் இணைந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, காலிமுகத்திடல் போராட்டத்துக்குப் பின்னர் நடைபெறும் மிகப்பெரிய போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது .