யாழ்.பல்கலைக்கழகத்தில் புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு

Admin
Nov 01,2022

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் செல்லத்துரை புருசோத்தமனின் 14ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

செல்லத்துரை புருசோத்தமனின் நினைவுருவ படத்திற்கு மாணவர்களால் ஈகைச்சுடரேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி அகவணக்கமும் இடம்பெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவனான செல்லத்துரை புருசோத்தமன் இராணுவத்தினரால் கடந்த 2008.11.01 அன்று படுகொலை செய்யப்பட்டிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது