நாளைய எதிர்ப்பு பேரணி குறித்து அமைச்சரவையில் கலந்துரையாடல்

Admin
Nov 01,2022

கொழும்பில் நாளை (2) ஒழுங்கு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் அமைச்சரவை கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கம் மற்றும் நாட்டை வீழ்ச்சி பாதைக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது சில அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மருதானை சுற்றுவட்டத்தில் இருந்து இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பமாகவுள்ளது. எதிரணியில் அங்கம் வகிக்கும் அரசியல்கட்சிகள், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள் மற்றும் மேலும் சில சிவில் அமைப்பின் பிரநிதிகள் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு ஸ்திரத்தன்மையை நோக்கி பயணிக்கின்ற சந்தர்ப்பத்தில் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதன் மூலம் சுற்றுலா உள்ளிட்ட பல துறைகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என சில அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.