சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
அரசியல் கைதிகள் விடுதலை: யாழில் நீதி அமைச்சர் வழங்கியுள்ள உறுதி
Admin
Oct 31,2022
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ அரசியல் கைதிகளின் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் (30) விஜயம் மேற்கொண்ட நீதி அமைச்சரை, அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்தனர்.
அதன் போது, நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 34 அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு நீதி அமைச்சரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன் போதே அமைச்சர், அண்மையில் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் வழக்கு நிலைமைகள் தொடர்பில் சட்டமா அதிபருடன் தொடர்ந்து கலந்துரையாடி விடுதலை செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.