யாழில் அதிகரிக்கும் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு

Admin
Oct 30,2022

யாழ் மாவட்டத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறை தரவுகளில் இருந்து தெரியவருகிறது.

யாழ்.மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இடம்பெற்றதாக 38 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அவற்றுள் காங்கேசன்துறை காவல்துறை பிராந்தியத்தில் 10 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதிகமான சம்பவங்கள் அச்சுவேலி காவல்துறை பிரிவில் இடம் பெற்றுள்ளன என யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்திய நிலையத்தில் 28 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

அவற்றுள் அதிகளவான சம்பவங்கள் கொடிகாமம் காவல்துறை பிரிவில் நடைபெற்றுள்ளன.

2022ஆம் ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறுமிகள் மீது பாலியல் வன்புணர்வு இடம்பெற்றதாக கடந்த ஒன்பதாம் மாதம் 30 ஆம் திகதி வரை எண்ணற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதில் காங்கேசன்துறை காவல் பிராந்தியத்தில் 9 சம்பவங்களும் யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்தியத்தில் 15 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்தியத்தில் உள்ள சுன்னாகம் காவல் பிரிவில் அதிகமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

அதேபோல் 2022 ஆண்டு 16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மீதான வன்புணர்வு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2022ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்தியத்தில் 4 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

2010ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் காவல்துறை பிராந்தியத்தில் மூன்று சம்பவங்களும் காங்கேசந்துறை காவல்துறை பிராந்தியத்தில் 4 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

2020 ஆம் ஆண்டு பாரதூரமான வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு அதை மூன்றாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது