வட மாகாணத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வு

Admin
Oct 30,2022

வட மாகாணத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

வடக்கு  - கிழக்கு மாகாணங்களில் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழுவின் உறுப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார்.

மதுபானத்திற்கு அடிமையானவர்களை மீட்பதற்கு புனர்வாழ்வு மையமொன்று உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ், குறித்த குழுவிடம் கோரியுள்ளார்.