கோட்டாவின் பதவி துறப்புக்கு காரணமான குருந்தூர் மலை விவகாரம்

Admin
Oct 29,2022

ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டாபய ராஜபக்ச விலக்கப்படுவதற்கு குருந்தூர் மலை விவகாரமும் காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒன்றியத்தை சேர்ந்த பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குருந்தூர் விகாரை புராதன பௌத்த விகாரை இல்லை என்று கூறுவதற்கான எந்த சான்றுகளோ, அது இந்து ஆலயம் என்று கூறுவதற்கான எந்த சான்றுகளும் கிடையாது என்றும், இந்த விடயத்தில் சில அமைச்சர்கள் புல்பெயர் தமிழர்களின் சலுகைகளுக்காக அவர்களுக்கு சார்பாக நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.