சிறப்புக்-கட்டுரைகள்
தமிழ் பத்திரிகைகள்
சினிமா செய்திகள்
திரைப்படங்கள் & TV நிகழ்ச்சிகள்
தமிழ் அரசியல் கைதிக்கு அரச இலக்கிய விருது!
Admin
Oct 29,2022
இலக்கியவாதிகளுக்கு உரிய பாராட்டுகளை வழங்குவதற்காக வருடாந்தம் ஏற்பாடு செய்யப்படும் அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் அரசியல் கைதி ஒருவரும் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
2006 கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பொறியியலாளர் சிவலிங்கம் ஆரூரனுக்கு அரச இலக்கிய விருது கிடைத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற்றது.
சிறையில் இருந்தவாறே, சிவலிங்கம் ஆருரன் 8 புத்தகங்களை எழுதியுள்ள நிலையில் அதில் ஆதுரசாலை என்ற தமிழ் நாவலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.