வெளிநாடுகளிலிருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகம் - 12 பேருக்கு சிவப்பு பிடியாணை

Admin
Oct 29,2022

வெளிநாடுகளில் இருந்து இலங்கையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் 12 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

அவர்களில் சிலர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷான் பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் நெருக்கமாக செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இதில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.