'பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும்'

Admin
Oct 28,2022

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார, அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது.

அதாவது, விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.