'ரணிலின் ஆட்டத்துக்கு முடிவு கட்டுவோம்'; மக்கள் பாராளுமன்றம் அமைப்பு

Admin
Oct 28,2022

அண்மையில் பாராளுமன்றத்தில் கலாச்சார தினைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கொழும்பு சுதந்திர சதுக்கத்தை பொது நிர்வாக அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கொழும்பு பொது நூலகத்தின் கேப்போர் கூடத்தில் ஊடக சந்திப்பு இன்று மதியம் இடம்பெற்றது.

மக்கள் பாராளுமன்றம் அமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஊடக சந்திப்பில் சிவில் மற்றும் வெகுஜன அமைப்பு ஆர்வலர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து மக்கள் பாராளுமன்ற அமைப்பாளர் ஆச்சார சுசாந்த கொடி துவக்கு கருத்து தெரிவிக்கும்போது

கடந்த 26ம் திகதி பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானதுக்கு அமைய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இயங்கி வந்த சுதந்திர சதுக்கத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் பொது நிர்வாக அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த முடிவின் பின்னணியில் உள்ள சதியையும் சதிக்கும்பளையும் வெளிப்படுத்தி மக்களின் கவனத்திக்கு கொண்டு வர வேண்டும். இந்த தீர்மானத்தை உடன் முறியடிக்க வேண்டும் ரணில் ராஜ பாக்ஷ அரசாங்கம் நாட்டை சீரளிக்கின்றது. அவர்களின் ஆட்டத்தை விரைவில் முறியடிப்போம். இது எமது நாடு ராணிளுடையது அல்ல மக்களுடைய அபிலசைகளை கேட்டறிவதில்லை கோட்டாவின் மஹிந்தவின் அபிலாசைகலையே ரணில் நிறைவேற்றி வருகிறார் அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்கப்போவாதில்ல என தெரிவித்தார்.