"மக்களது ஆணை ஏமாற்றப்பட்டதன் விளைவே மக்கள் எழுச்சி போராட்டம்"

Admin
Oct 23,2022

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் 22ஆவது சட்டதிருத்தம் நிறைவேற்றப்பட்ட உடனே அரசியலமைப்பின் 21வது சட்டதிருத்தமாக கருதப்படுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாக்களிப்பு தொடர்பாக பல பேருக்கு பல எண்ணங்கள் இருக்கின்றன.அதற்கு காரணம் என்னவென்றால் அரசியலமைப்பு மற்றும் மறுசீரமைப்பு என்ற விடயம் பல தசாப்தங்களாக இந்த நாட்டில் இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை முற்றாக ஒழிக்க வேண்டும்.என தொடர்ச்சியாக வேட்பாளர்கள் முன்வைத்த கோரிக்கை அல்ல மக்களுடைய ஆணையாகவும் இருக்கின்றது.கடைசியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ கூட நிறைவேற்று அதிகார முறை பற்றி எதுவும் சொல்லாமல் விட்டாலும் புதிய அரசியலமைப்பு ஒன்றை இந்த வருடத்துக்குள்ள உருவாக்குவேன் என்று கூறினார்.

மக்களது ஆணை ஏமாற்றப்பட்டதுடன் பொருளாதார பிரச்சினை காரணமாகத் தான் மக்களின் எழுச்சி போராட்டம் ஏற்பட்டது.இனிமேல் நாடாளுமன்றத்தை நம்பி பலனில்லை.வேட்பாளர்களை நம்பி பலனில்லை எங்களுக்கு ஒரு அடிப்படை மாற்றம் வேண்டும் என்றும் ஆட்சிமுறையிலும் மாற்றம் வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்கள்.

இதனால் தான் இந்த சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டது.அமைக்கப்போகின்ற குழுக்கள் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லை.அரசாங்கத்தின் ஆட்சி மேலோங்கப் போகிறது.மக்களுக்கு மேல் பூச்சு பூசி அவர்களை ஏமாற்றம் ஓர் சட்டதிருத்தமாக காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மக்களை ஏமாற்றும் சட்டதிருத்தத்தை கொண்டு வந்தால் நெடுங்காலத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு செயலாக அது மாறும். பல தசாப்தங்களாக செய்யப்பட்டது.அது மீண்டும் செய்யப்படுகின்றது. ஆகையினாலே உள்ளடக்கத்திலே பாதகமான விளைவுகள் இல்லாவிட்டாலும் ஒருசில நல்ல விடயங்கள் இருந்தாலும் கூட இதுவும் மக்களை ஏமாற்றும் செயலாகவே காண்கின்றேன்.

இதில் ஒரு நன்மை மட்டும் தான் உள்ளது.இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றத்துக் வர முடியாது .இதை ஒரு தனிமனிதனை குறிவைத்து செய்யப்படுகின்ற விடயம்.

பொதுஜனபெரமுன வாக்களித்துள்ளது.அதில் சிலர் வாக்களிக்கவில்லை அதற்கான காரணம் என்ன என செய்தியாளர் ஒருவரால் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலத்த சுமந்திரன், தனிமனதர்களின் செல்வாக்குகளால் சிலர் வாக்களிக்கவில்லை.சிலர் வாக்களித்துள்ளனர்.இப்படி வாக்களித்து இருப்பது நாட்டின் அடிப்படைச் சட்டம் உயரிய சட்டம் மக்களுடைய இணக்கப்பாடு என்று சொல்கின்ற விடயம் .இப்படியான காரணிகளை வைத்து தீர்மானிப்பது மிகவும் வருத்த்துக்குரிய விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.