மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை,மீண்டும் தொடரும் என எச்சரிக்கை

Admin
Oct 23,2022

” கோட்ட கோ கம மக்களின் போராட்டம் ஜாதி மதம் மொழி கடந்த பயணமாக அமைந்திருந்தது.அதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது.அரசியல்வாதிகள் யாரும் உள்ளே வராதீர்கள். கட்சி வெறியை பயன்படுத்தி மக்களையும் எம்மையும் பிரிக்காதீர்கள் என்று சுயாதீன சுதந்திர மக்கள் ஏற்பட்டாளர் டனிஷ் அலி கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கோட்ட கோ கம மக்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை.மக்கள் இன்னும் சுதந்திரம் பெற வில்லை, இலங்கையில் தொடர்கிறது வறுமையின் கொடுமை.நாளுக்கு நாள் விலை வாசி அதிகரிப்பு.மக்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை. எனவே காலி முகத்திடல் போராட்டம் மீண்டும் தொடரும்.

மக்களை மீட்க கட்சி சார்பற்ற சுதந்திர மக்கள் என்ற தொனிப்பொருளில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் இல்லாத தனி பயணம் நாட்டு மக்களையும் நாட்டையும் மீட்கும் போராட்டத்தில் அரசியல் இல்லை, கட்சி இல்லை, பாராளுமன்றம் இல்லை,பாராளுமன்ற உறுப்பினர் இல்லை, சுயாதீன மக்களை இணைக்கும் பயணம், நன்றாக மக்களையும் நாட்டையும் ஏமாற்றிய இலங்கையின் அரசியல்வாதிகள் குறிப்பாக கோட்டபாய ராஜபக்ச, மஹிந்த, நாமல், பெஷில், இவர்களோடு இன்னும் பலர்.

அவர்களை இனம் கண்ட நாட்டு மக்களையும்,மாணவத் தலைவர்களையும் இன்றைய ஜனாதிபதி பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் சிறை பிடித்துள்ளார்.

மக்களின் பிரச்சினை இன்னும் தீரவில்லை. எனவே காலி முகத்திடல் போராட்டம் மீண்டும் தொடரும். கட்சி சார்பற்ற சுதந்திர மக்கள் என்ற தொனிப்பொருளில் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று இன்று நடைபெற்ற சுதந்திர மக்கள் சந்திப்பில் டனிஷ் அலி தெரிவித்தார்.