நிறைவேறியது 22 ஆம் திருத்தச்சட்டம்

Admin
Oct 22,2022

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு  பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நிலையில்,  சட்டமூலத்திற்கு ஆதரவாக 179 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 1 வாக்கும் பிரயோகிக்கப்பட்டன.  அதற்கமைய அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்த சட்டமூலம் 178  மேலதிக வாக்குகளால்  இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில்  நிறைவேற்றப்பட்டது. மீண்டும் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, சட்டமூலத்திற்கு ஆதரவாக 174 வாக்குகள் பதியப்பட்டன. எதிராக எந்தவித வாக்குகளும் பதியப்படவில்லை. ஒருவர் வாக்களிப்பை புறக்கணித்திருந்தார்.